உள்ளூர் செய்திகள் (District)

கரு வளர்ச்சி, ரத்த உற்பத்திக்கு செறிவூட்டப்பட்ட அரிசி உணவு சிறந்தது

Published On 2023-04-04 08:38 GMT   |   Update On 2023-04-04 08:39 GMT
  • புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல்
  • உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, செறிவூ ட்டப்பட்ட அரிசியின் மூலம் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அரிசிகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழி ப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் இருந்து சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அதே சுவை, அதே தோற்றம், அதே சமையல் முறையில் சமைக்கலாம். இதில் உள்ள இரும்பு சத்து மூலம் இரத்த சோகையினை தடுக்கலாம். போலிக்அமிலம் மூலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. வைட்டமின் பி-12 மூலம் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு தமிழக அரசால் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியினை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், துணைப் பதிவாளர் (பொ.வி.தி.) கோபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News