உள்ளூர் செய்திகள் (District)

விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணி

Published On 2023-04-15 07:26 GMT   |   Update On 2023-04-15 07:26 GMT
  • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்றது
  • விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணியை தொடங்கினர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். புதிய ஆண்டில் விவசாயம் தழைக்க வேண்டும், ஆடு, மாடுகளுக்கு தீவனம் கிடைக்க வேண்டும். உணவு பொருள் உற்பத்தி அதிகரித்து பசி, பட்டினி இல்லாத நிலை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நல்வேறு பூட்டும் நிகழ்ச்சி தமிழ் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, பிலாவிடுதி, பட்டமாவிடுதி, மழையூர், ரெகுநாதபுரம், திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, வாண்டான்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது உழவு பணிக்கு பெரும்பாலும் டிராக்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கிராம பகுதிகளில் பழமை மாறாமல் உழவு மாடுகளில் ஏர் பூட்டி விவசாய பணிகளை தொடங்கினர்.

Tags:    

Similar News