உள்ளூர் செய்திகள்

தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மீட்டெடுத்த முதல்வரை பாராட்டுவது நமது கடமை- அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

Published On 2023-05-31 08:08 GMT   |   Update On 2023-05-31 08:08 GMT
  • தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மீட்டெடுத்த முதல்வரை பாராட்டுவது நமது கடமை என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்
  • கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை வகித்தார்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கமணி வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டுக்கு அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாக இருப்பதால் ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த தீர்ப்புக்கான விழாவை புதுக்கோட்டையில் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் சம்மதம் அளித்துள்ளார்.

இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த விழாவிற்கு வரும் முதலமைச்சரை வரவேற்க தி.மு.க.வினர் திரண்டு வாருங்கள். விழாவிற்கு வருபவர்கள் விழா முடியும் வரை அரங்கினுள் அமர்ந்து முதலமைச்சரை பாராட்டவேண்டும்.விழாவிற்கு வருகை தரும் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும். சட்ட போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க உண்ணாமல் உறங்காமல் நடவடிக்கை எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் . தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மீட்டெடுத்த அவரை பாராட்டுவது நமது கடமை.

கோட்டை விடுவது அ.தி.மு.க., மீட்டெடுப்பது திமுக. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தொடங்கியதும் முடிவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான்இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். கூட்டத்தில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி, தி.மு.க. மாவட்ட துணைச செயலாளர் ஞான.இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் அருவடிவேல், ரவி மாவட்ட கவுன்சிலர் உஷாசெல்வம், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, நகரத் துணைச் செயலாளர் செங்கோல், சஷ்டி முருகன், சையது இப்ராஹிம், கிருஷ்ணமூர்த்தி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News