உள்ளூர் செய்திகள்

மஞ்சுவிரட்டு போட்டி

Published On 2023-02-20 09:22 GMT   |   Update On 2023-02-20 09:22 GMT
கந்தர்வகோட்டை, அறந்தாங்கி சிலட்டூரில் நடைபெற்றது

புதுக்கோட்டை,

அறந்தாங்கி தாலுகா சிலட்டூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் தஞ்சை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 13 காளைகள் போட்டியில் பங்கேற்றன. அதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனரா என மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.ஒரு காளைக்கு 9 வீரர்கள் என 25 நிமிடங்கள் ஒவ்வொரு போட்டியும் நடைபெற்றது.போட்டியில் வீரர்கள் காளைகளை அடக்கியும், காளைகள் வீரர்களிடமிருந்து தப்பித்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது.மொத்தம் 13 காளைகளில் பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் சிக்காததால், காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கப்பணம், அண்டா உள்ளிட்ட நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா குளத்தூர் நாடு அருள்மிகு முனியாண்டவர் அருள்மிகு பிடாரியம்மன் கோவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.பிடாரியம்மன் கோவில் எதிரில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தாசில்தார் ( பொறுப்பு) தயாவதி கிறிஸ்டினா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தமிழ் அய்யா முன்னிலை வகித்தனர்.மஞ்சுவிரட்டில் காயம் அடைந்த 11 வீரர்களுக்கு உரிய சிகிச்சை மருத்துவக் குழுவினரால் அளிக்கப்பட்டது. மஞ்சுவிரட்டை தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் , பறவை காவடி, கரும்பு தொட்டில் காவடி, அழகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.ம ற்றும் ஏராளமான பொதுமக்கள் விசிலடித்து, கைத்தட்டி ஆரவரத்துடன் கண்டு ரசித்தனர். காவல் துறை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் மற்றும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News