உள்ளூர் செய்திகள் (District)

110 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி

Published On 2023-03-27 08:17 GMT   |   Update On 2023-03-27 08:17 GMT
  • அரசு திட்டங்களை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அழைப்பு
  • அரசின் திட்டங்களை அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை ஆயுதப் படை திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 110 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.பின்னர் அவர் கூறியதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த நலத்திட்டங்கள் பெறும் பெண்கள் அனைவரும் இதனை தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அரசு அலுவலர்கள் நல்ல முறையில் செயல்படுத்தி பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. முத்துராஜா வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ் செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சியாமளா வட்டாட்சியர் விஜயலெட்சு, சமூக நலத்துறை தொழில் கூட்டுறவு அலுவலர் மனோகரன், விராலிமலை சந்திரசேகரன், எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News