ஸ்மார்ட் வகுப்பறைகள், கலையரங்கம் திறப்பு
- கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்டது
- ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருப்பதை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, பள்ளி சுற்றுச்சுவர், கலையரங்கம், மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வ கோட்டை கோமாபுரம் தச்சங்குறிச்சி, காட்டு நாவல், அண்டனூர், அரியாணிப் பட்டி, மஞ்ச பேட்டை. நெப்புகை, புதுநகர் உள்ளிட்ட ஊராட்சி களில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், பயணியர் நிழற்குடை, கலையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.கோட்டாட்சியர்செல்வி முன்னிலையில் கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆணையர்கள் திலகவதி, நளினி, நகரச் செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, ஆரஞ்சு பாப்பா குணசேகரன், அன்பு, இளங்கோவன், முல்லை ஆறுமுகம், முருகேசன், மணிகண்டன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாரதி பிரியா அய்யாதுரை, கலிய பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.