உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

Published On 2022-12-28 06:43 GMT   |   Update On 2022-12-28 06:43 GMT
  • ஆலங்குடியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது
  • நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பசுமாடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான கழிவு நீர் தொட்டியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பசு மாடு தவறி விழுந்தது. பொதுமக்களால் மீட்க முடியாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பசுமாடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை வீரர் பாண்டி செல்வன் கழிவு நீர் தொட்டியில் இறங்கி கயிறு கட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை கயிற்றில் பிணைத்தார்.பின்னர் கழிவு நீர் தொட்டியில் இருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து தூக்கி வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Tags:    

Similar News