வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீதமாக உயர்த்தி வழங்க தீர்மானம்
- வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீதமாக உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உலக காதுகேளாதோர் தினவிழா
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் சார்பில் உலக காதுகேளாதோர் தினவிழா தனியார் திருமண மகாலில் நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். வரவேற்புரையை காதுகேளாதோர் சங்க சேர்மன் ஜெயகுமார் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக ஒலி, ஒளி அமைப்பாளர் சங்க தலைவரும், தி.மு.க. நகரச்செயலாளருமான செந்தில் கலந்துக் கொண்டு பேசினார்.
விழாவில் பள்ளிகள், கல்லூரிகளில் சைகைமொழி தெரிந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு அலுவலங்களில் சைகைமொழி பெயர்ப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7சதவீதமாக உயர்த்தி தரவேண்டும், ரூ.3000 முதல் 5000 வரை உதவி தொகை உயர்வு வேண்டும், சிறப்பு வீடுகள், மனைகள் இலவசமாக வழங்க வேண்டும், ஓட்டுனர் உரிம அட்டை வழங்கப்பட வேண்டும், கபடி போட்டியில் எஸ்டிஏடீ கபடி காதுகேளாதோர் அனுமதியை ஏற்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் காது கேளாதோர் சங்க துணை சேர்மன் செல்வராஜ், திரைப்பட நடிகரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான சாத்தையா, அரசு வழக்கறிஞர் சிவா, முத்துரையான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் தீத்தப்பன், சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபு, சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டுக் கழகம்தலைவர் பாலாஜி, மாவட்ட தலைவர் சிவக்குமார். முகமது தாகீர் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.