உள்ளூர் செய்திகள்

நாட்டுபடகு மீன்பிடி பகுதியில் அத்துமீறல்-விசைபடகுகளை சிறைபிடித்த மீனவர்கள்

Published On 2023-02-08 10:18 GMT   |   Update On 2023-02-08 10:18 GMT
  • நாட்டுபடகு மீன்பிடி பகுதியில் அத்துமீறல்-விசைபடகுகளை சிறைபிடித்தனர்
  • கடல்பல்லி, கடல் அட்டைகள் பறிமுதல்

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியி லிருந்து முத்துகுடா வரை 32 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் பயன்படுத்தப்படுகின்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் கரை பகுதியிலிருந்து 5 நாட்டிக்கல் தூரம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். விசைப்படகு மீனவர்களுக்கு 5 நாட்டிக்கல்லிருந்து அப்பாற்பட்டே மீன்பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் விசைப்படகு மீனவர்கள், 5 நாட்டிக்கல் தொலைவிற்கு அப்பாற்பட்டு சென்று மீன் பிடிக்காமல், நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கின்ற தூரத்திலேயே , விசைப்ப டகு மீனவர்களும் மீன்பிடிப்பதாகக் கூறப்படு கிறது.

இது குறித்து அவ்வப்போது இரு தரப்பு மீனவர்களிடையே உரசல் இருந்து வருகிறது. விசைப்படகுகளில் அரிவலைகளை பயன்படு த்துவதால் மீன் வளர்ச்சிக்கு ஆதாரமான கடல்பாசி, பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் அனைத்தும் அள்ளி எடுக்கப்படுகிறது என்றும், இதனால் மீன் வளம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்கால த்தில் எதிர்காலத்தில் இந்த கடல் பகுதியில் மீன் இனமே இருக்காது என்றும் நாட்டு படகு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ஆர்புது ப்பட்டினம் அருகே நாட்டுப்படகு மீனவர்கள் வலை விரித்து வைத்திருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற விசைப்படகு மீனவர்கள் விரிக்கப்பட்டி ருந்த வலைகளை அறு த்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நாட்டுப்ப டகு மீனவர்கள், வலைகளை அறுத்த கோட்டைப்பட்டினம் மற்றும் தொண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 விசைப்படகுகளை சிறைபிடித்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தகவலறிந்த கடலோரக் காவல் படையினர், மீன்வளத் துறை அதிகாரிகள் ஆகியோர் கரைக்கு கொண்டு வரப்பட்ட 2 விசை படகுகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வில் 2 படகுகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட 61 கடல் பல்லி, 9 கடல் அட்டை ஆகியவைகள் வலைகளில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.அதனை தொடர்ந்து கடல் அட்டை மற்றும் பல்லிகளை கைப்பற்றிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து நாட்டுப் படகு மீனவர்கள் கூறும்போது, விசை ப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் 80 லட்சம் மதிப்பிலான வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் எங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரிவலையை பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் மீன்வளமே கேள்விக்குறியாகிவிடும் எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில் மீனவ மக்கள் ஒன்றிணைந்து மிகப் பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். மேலும் தீர்வு காணும் வரை சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க மாட்டோம். அந்த படகுகள் எங்களிடமோ அல்லது அரசு அதிகாரிகள் வசமோ இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News