கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம்
- கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் காமராஜ். ஆணையர் திலகவதி, துணைத் தலைவர் செந்தாமரை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசும்பொழுது புதிய அங்கன்வாடி கட்டிடம் கால்நடை மருத்துவமனைகளில் போதுமான பணியாளர்களை நியமிப்பது ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பேசும்பொழுது, கந்தர்வக கோட்டைக்கு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதே போல தரமான மருத்துவ சிகிச்சைகள் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் புதிய நவீன மருத்துவமனை கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றி தரப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாண்டியன், திருப்பதி, முருகேசன், பாரதி பிரியா ஐயாத்துரை, சுதா ராஜேந்திரன், மலர் சின்னையன், கலியபெருமாள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மன்ற பொருள்களை ஒன்றிய அலுவலர் வை.பரமேஸ்வரி வாசித்தார்.