உள்ளூர் செய்திகள் (District)

பெண் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்

Published On 2023-04-13 07:37 GMT   |   Update On 2023-04-13 07:37 GMT
  • 804 பெண் விவசாய உறுப்பினர்கள் உள்ளனர்
  • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி, கூழையான் விடுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், பெண் விவசாயிகளை கொண்ட தொண்டைமான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பெண் விவசாயிகளை கொண்டு உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொண்டைமான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமானது, முழுவதும் பெண் விவசாயிகளை கொண்டு பெருங்கொண்டான் விடுதி ஊராட்சி, கூழையான்விடுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை, திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட உற்பத்தியாளர் குழுக்களை சார்ந்த 804 பெண் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். இதன் இயக்குனர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் அனைவரும் பெண்களே.இந்நிறுவனத்திற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் தொடக்க நிதி மானியமாகவும், ரூ.10 லட்சம் வணிக விரிவாக்க நிதி மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. வணிக விரிவாக்க நிதியினை பயன்படுத்தி கடலை தோல் பிரிக்கும் எந்திரம் மற்றும் எண்ணெய் செக்கு எந்திரம், வேளாண் பொறியியல் துறை உதவியுடன் வாங்கப்பட்டு எண்ணெய் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலையின் மூலம் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை உற்பத்தி செய்ய முடியும்.இந்த நிகழ்ச்சியில் திட்ட மாவட்ட செயல் அலுவலார் ஜெய்கணேஷ், செயற்பொறியாளர் (வேளாண் பொறியி யல்துறை) செல்வம், செயல் அலுவலார் கிருபாகரன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News