உள்ளூர் செய்திகள் (District)

பொன்னமராவதி செவலூரில் மீன்பிடி திருவிழா

Published On 2023-04-06 07:32 GMT   |   Update On 2023-04-06 07:32 GMT
  • தலைக்கு மூன்று கிலோ வரை அள்ளி சென்றனர்
  • வேடிக்கை பார்க்க வந்த வெளியூர்வாசிகளும் மீன் பிடித்து சென்றனர்

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசா யம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெற்றது.அதிகாலையிலேயே பொது மக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா,வலை,பரி,கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். ஜாதி மதம் பாராமல் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. தூரி என்ற மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர். முன்ன தாக ஊர் பெரிய வர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வந்த வெளியூர் நபர்களும் கண்மாய்க்கு வந்து ஆர்வத்தோடு மீன்பிடித்தனர்.ஒரு சிலர் கைகளுக்கு இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரை எடை கொண்ட கட்லா வகை மீன்கள் கிடைத்தன.

Tags:    

Similar News