உள்ளூர் செய்திகள்

பெண்கள் சாலை மறியல்

Published On 2023-03-19 07:40 GMT   |   Update On 2023-03-19 07:40 GMT
  • ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம்
  • போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள வடக்குப்பட்டியில் ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்குப்பட்டியில் புதிதாக ரேஷன் கடை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.இந்நிலையில் வடக்குப்பட்டி மற்றும் கல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ரேசன் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு சென்றனர்.அப்போது அங்கு உங்களது பெயர் இங்கு இல்லை எனவும் இதனால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது என கடை ஊழியர் தெரிவித்த தாக கூறப்படுகிறது .இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் வடகாடு பெரிய கடை வீதி ஆலங்குடி ஆவணம் கைகாட்டி நெ டுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமா தான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உரிய அரசு அலுவலர்களிடம் பேசி ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Tags:    

Similar News