உள்ளூர் செய்திகள்
பூக்காரதெரு சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும்
- பூச்சந்தை சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
- தமிழ் அர்ச்சகர்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தெய்வ தமிழ்ப் பேரவை நகர அமைப்பாளர் பழ.ராசேந்திரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் பூக்கார தெரு பூச்சந்தை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ளது.
இந்த குடமுழுக்கின் போது நிகழும் வேள்விச்சாலை, கருவறை, கோபுரகலசம் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும்.
வேள்விசாலை, கோபுர கலசம் ஆகிய இடங்களில் சமஸ்கிருத அர்ச்சகர் எண்ணிக்கைக்கு இணையாக தமிழ் அர்ச்சகர்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும். எனவே குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்து உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.