குருமா பார்சலில் இறந்த நிலையில் பூரான்
- வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்துள்ளளார்.
- கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த தருமகுளம் கடைவீதியில் பெருந்தோட்டத்தை சேர்ந்தவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவரது கடையில் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் நேற்று பரோட்டா வாங்கி சென்றுள்ளார்.
வீட்டில் சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்து பார்த்த போது குருமாவில் பூரான் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனைஅடுத்த மூர்த்தி இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்ததார்.
புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.
மேலும், கடையை முறையாக பராமரிக்காததால் அதனை சீரமைத்த பின்னரே கடையை திறக்க வேண்டும் எனக்கூறி கடையை மூடி சென்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.