உள்ளூர் செய்திகள்

ஒரத்தநாடு விற்பனை கூடத்தில் 26-ந்தேதி வரை கொப்பரை கொள்முதல்

Published On 2023-11-06 09:45 GMT   |   Update On 2023-11-06 09:45 GMT
  • விவசாயிகளின் வங்கி கணக்கில் கிரைய தொகையானது நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
  • ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூா் விற்பனை குழுவுக்கு உள்பட்ட ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிகழாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ. 108.60 என்ற வீதத்தில் விவசாயிகளிடமிருந்து அரைவை கொப்பரை நேபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 1602 விவசாயிகளிடமிருந்து 2 ஆயிரத்து 499 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நி லையில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டமானது வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய அரசாணை பெறப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது, சிறு குறு விவசாயிகள் நலனை கருதி அவா்களிடமிருந்து கொப்பரை கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சாா்ந்த விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனா்.

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிரைய தொகையானது நேரடியாக வரவு வைக்கப்படுவதுடன் தரத்தின் அடிப்ப டையிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இப்பகுதியைச் சாா்ந்த தென்னை விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News