விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி
- விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயிகளுக்கு‘’தரமான விதை உற்பத்தி’’குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
- பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், மேல்சாத்தம்பூர், ஆவாரங்காட்டு மேடு சமுதாயக்கூடத்தில் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன விவசாயி களுக்கு''தரமான விதை உற்பத்தி''குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் தரமான விதை உற்பத்தியின் நோக்கம், விவசாயத்தின் ஆதாரமாம் விதையின் முக்கியத்துவம், சாகுப டிக்கு ஏற்ற விதையின் உற்பத்தி திறன், உணவு உற்பத்தியில் விதைகளின் முக்கியத்துவம்,பயிர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சி வழங்கினார்.
நாமக்கல், விதை சான்றளிப்புத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர் சித்திரைசெல்வி,
வேளாண்மை அலுவலர் அருண்குமார் ஆகியோர் விதை உற்பத்தியில் மண்பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.
பயிற்சியில் பரமத்தி வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், ஆகியோர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும், மேற்கண்ட பயிற்சியின் நோக்கம் அதன் பயன்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
பரமத்தி உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன் உதவி வேளாண்மை அலுவலர், கவுசல்யா,, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் தரமான விதைகள் தேர்வு, விதை நேர்த்தி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.