நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் தெப்ப திருவிழா
- சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தெப்பத்தில் உலா வந்தார்.
- 12-ம் திருவிழா விடையாற்றி உற்சவம், மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
பேராவூரணி:
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடனும் இரவு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.
வண்ண மயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா வந்தது.
11- ம்நாள் திருவிழா காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் அருகில் உள்ள திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தெப்பத்தில் உலா வந்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று 12 -ம் திருவிழா விடையாற்றி உற்சவம், மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், பரம்பரை அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், கோயில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.