மத்திய அரசை கண்டித்து ெரயில் மறியல் மற்றும் முற்றுகையிடும் போராட்டம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
- மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு கூட்டம் கடலூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையா, ராமச்சந்திரன், திருவரசு, அசோகன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து, வேலையின்மைக்கு எதிராக காலி பணியிடங்களை மத்திய அரசு நிரப்ப அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரியும் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும், என்.எல்.சி நிறுவனத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை மாற்று இடம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 1 ந்தேதி முதல் 7 ந்தேதி வரை கடலூர் மாவட்ட முழுவதும் பிரச்சார இயக்கம் தெரு முனை கூட்டம் வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது, கடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடியில் ெரயில் மறியல் போராட்டம். மற்றும் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மையங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.