கும்பகோணத்தில் ரெயில் மறியல்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
- கும்பகோணத்தில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
- போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சுவாமிமலை:
விலைவாசி கட்டுப்படுத்திடவும் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை கொடுக்கவும், 100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ரெயில் மறியல் போராட்டத்திற்கு சி.பி.எம் மாவட்ட செயலாளர் சின்னை, பாண்டியன் தலைமை வகித்தார்.
மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் மாநகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான சிபிஎம் கட்சியின கலந்து கொண்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் முன்னதாகவே ரயில் நிலையம் வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பலரை கைது செய்தனர்.
இருப்பினும் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ராமர் உள்ளிட்ட வாலிபர் சங்கத்தினர் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் காலை 8.40க்கு வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மறிலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன முழக்கமிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.