பயணி தவற விட்ட ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்த ரெயில்வே போலீசார்-பொதுமக்கள் பாராட்டு
- சென்னைக்கு தினசரி நீலகிரி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.
- பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் தவறி விழுந்தது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி நீலகிரி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.சென்னை பெருங்குடியைச்சேர்ந்த பாக்யராஜ் (45). டீ தூள் வியாபாரி. இவர் வியாபாரம் நிமித்தமாக ஊட்டி செல்ல திட்டமிட்டார்.
அதன்பேரில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் பயணித்து மேட்டுப்பாளையம் வந்து இறங்கிய அவர் பின்னர் ஊட்டி செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ெரயில் வரும் போது அசதியில் அவர் உறங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, அவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் ெரயிலில் உள்ள நடைபாதையில் தவறி விழுந்து உள்ளது. இதனை அவர் கவனிக்கவில்லை. அப்போது ரோந்துப்பணியில் இருந்த ெரயில்வே காவலர் முருகன் அப்பணத்தை மீட்டு மேட்டுப்பாளையம் ெரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒப்படைத்தார்.இந்த நிலையில் பணம் தவற விட்டது குறித்து அறிந்த ெரயில் பயணி பாக்கியராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து ெரயில்வே போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ெரயில் பயணி பாக்யராஜிடம் விசாரித்த பின்னர் அந்த பணத்தினை பத்திரமாக மேட்டுப்பாளையம் ெரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
ெரயிலில் பயணி தவற விட்ட ரூ.50 ஆயிரம் பணத்தை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.