உள்ளூர் செய்திகள்

மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மிக குறைந்த அளவிலேயே குளிப்பதை படத்தில் காணலாம்.


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2022-10-13 09:02 GMT   |   Update On 2022-10-13 09:02 GMT
  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
  • குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தென்காசி:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர்,புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோன்று மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்தது. காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இருப்பினும் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவே காணப்பட்டது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் இன்றும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News