உள்ளூர் செய்திகள்
நெல்லை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவின் மேற்கூரையில் கசிந்த மழை நீர்
- தென் மாவட்டத்தில் முக்கிய மருத்துவமனையில் ஒன்றாக நெல்லை அரசு மருத்துவமனை உள்ளது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக கட்டப்பட்டது.
நெல்லை:
தென் மாவட்டத்தில் முக்கிய மருத்துவமனையில் ஒன்றாக நெல்லை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்க ணக்கனோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று பெய்த கோடை மழை காரணமாக அவசர சிகிச்சை பிரிவின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதி அடைந்தனர்.
சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் மேற்கூரையில் இருந்து மழை நீர் கசிந்தது நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.