உள்ளூர் செய்திகள்

முன்னோடி மருத்துவ கட்டிடம் கட்டும் இடத்தை ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடியில் முன்னோடி மருத்துவ கட்டிடம் கட்டும் இடத்தை ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-05-15 07:49 GMT   |   Update On 2023-05-15 07:49 GMT
  • முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்தனர்.
  • ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. அரசு அமைந்த உடன் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ராஜா சட்டமன்றத்தில் சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு புதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முன்னோக்கு மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 9 கோடி நிதி ஒதுக்கியது. இந்நிலையில் புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கான இடங்களை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் ராஜசேகரன், உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், செயற்பொறியாளர் அழகர்சாமி, உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர், உதவி பொறியாளர்கள் சுரேந்தர், பாக்கியநாதன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News