உள்ளூர் செய்திகள்

சதய விழாவில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.

காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தவர் ராஜராஜசோழன்- கலெக்டர் பேச்சு

Published On 2022-11-02 10:31 GMT   |   Update On 2022-11-02 10:31 GMT
  • சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் ராஜராஜ சோழனுக்கு மட்டும் தான்.
  • யானைகளில் வலம் வந்த சோழன் இடத்தில் நாம் வசிப்பது பெருமை.

தஞ்சாவூர்:

மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழா இன்று தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. நாளை வரை இந்த விழா நடைபெறுகிறது. இன்று முதல் நாள் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். எத்தனை மன்னர்கள் ஆண்டிருந்தாலும் சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மட்டும் தான். அவர் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு ஆட்சி நடத்தினார். காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். இதற்கு தஞ்சை பெருவுடையார் கோவிலே சான்று. 1000 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மாமன்னர் குதிரை, யானைகளில் வலம் வந்திருப்பார். அந்த இடத்தில் தற்போது நாம் நிற்கிறோம். இது நமக்கெல்லாம் பெருமை. ஒரு மன்னர் போர் தொடுக்கும்போது படைகளுக்கு பின்னால் நிற்க கூடாது. முன் நின்று வழி நடத்த வேண்டும். அப்படித்தான் மாமன்னர் தமது படையை முன்னே நின்று வழி நடத்தியுள்ளார். பல போர்களில் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News