உள்ளூர் செய்திகள்

வண்டல் மண் அள்ள 213 விவசாயிகளுக்கு அனுமதி

Published On 2022-08-06 08:16 GMT   |   Update On 2022-08-06 08:16 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் வண்டல் மண் அள்ள 213 விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
  • பொதுப்பணித்துறை-200, ஊரகவளர்ச்சிதுறை- 506 என மொத்தம் 706 கண்மாய்களில் மண் அள்ளலாம்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கண்மாய்கள் துார்வாரப்படாமல் நீர்பிடிப்பு பகுதிகள் மண்மேவி மேடாகி உள்ளது. இதையடுத்து விளைநிலத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் கண்மாய்களில் இலவசமாக வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி தாலுகா அலுவலகத்தில் பட்டா, சிட்டா, அடங்கல் விபரங்களுடன் விண்ணப்பித்துள்ள 213 விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், கண்மாய் வண்டல் மண் விளைநிலத்தில் இடுவதால் மண்ணின் வளம் மேம்படும். பொதுப்பணித்துறை-200, ஊரகவளர்ச்சிதுறை- 506 என மொத்தம் 706 கண்மாய்களில் மண் அள்ளலாம். வருவாய்துறை, கனிமவளத்துறையினர் ஆவணங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கின்றனர். இதுவரை 3 ஆயிரத்து 196 கனஅடி அளவிற்கு கண்மாய்களில் மண் அள்ளியுள்ளனர். இறவை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 90 கன அடி, மானாவாரிக்கு 75 கனஅடி வரை மண் எடுக்கலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News