உள்ளூர் செய்திகள்

காஞ்சிரங்குடி ஊராட்சி மேலவலசை கிராமத்தில் எருதுகட்டு விழாவில் சீறிப்பாய்ந்து வந்த காளையை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்ற காட்சி.

263-வது ஆண்டு எருதுகட்டு விழா

Published On 2023-09-14 08:24 GMT   |   Update On 2023-09-14 08:24 GMT
  • கீழக்கரை அருகே மேலவலசை கிராமத்தில் 263-வது ஆண்டு எருதுகட்டு விழா நடந்தது.
  • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோவிலில் 263-ம் ஆண்டு எருதுகட்டு விழா நடைபெற் றது.

இதில், 55 கிராமங்களில் இருந்து 55 காளைகள் போட் டியில் பங்கேற்றது. பின்னர் மைதானத்தில் அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக களத் தில் அவிழ்த்து விடப்பட் டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அடக்கினர்.

இதனை காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், மாடு முட்டியதில் காயமடைந்தவர்கள் ஆம்பு லன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை கோவில் டிரஸ்டி மேலவலசை கிழவன் தலைமையிலான விழாக் கமிட்டி யினர் சிறப்பாக செய்திருந் தனர்.

Tags:    

Similar News