- ராமநாதபுரத்தில் அம்பேத்கர்-பெரியார் சிலை அமைக்க வேண்டும்.
- தெருமுனை பிரசார கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரண் மனை முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் அம்பேத்க ரின் 132-வது பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தை சிவா முன்னிலை வகித்தார். இந்திய இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் பன்னீர் செல்வம் வரவேற்று பேசினார்.
பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முருகன், ஐந்திணை மக்கள் கட்சி மாநில ஒருங்கி ணைப்பாளர் ஸ்டீபன்ராஜ், மாவட்ட செயலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமநாத புரத்தில் அம்பேத்கர், பெரியார் சிலைகளை அமைக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம்,கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிசை படு கொலை ெசய்ததை வன்மையாக கண்டிக்கி றோம். அவரை கொலை செய்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பிர சாரத்தில் அருந்ததியர் சமுதாய மக்களை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.