சதக் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
- சதக் பொறியியல் கல்லூரியில் பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
- பிளஸ்-2 தேர்வு என்பது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமையக்கூடியது.
கீழக்கரை
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முஹம்மது செரீப் தலைமையில் நடந்தது. சதக் அறக்கட்டளை கல்லூ ரிகளின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி. விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் சந்திரன் கலந்து கொண்டு ''பிளஸ்-2 தேர்வு என்பது உங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமையக்கூடியது. மாணவர்கள் உயர்கல்வியைக் கற்று வீட்டிற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் பல துறைகளில் சாதித்து நாட்டை வல்லரசு நாடாக மாற்றவதற்கு ஒவ்வொரு மாணவரும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்'' என்று அறிவுரை கூறினார்.
முன்னதாக புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு–பள்ளிகளின் மாணவ-மாணவிகள் சுமார் 2, 300 பேர் கலந்து கொண்டனர்.கல்லூரியின் தலைமை திட்டமிடல் அதிகாரி திராவிடச்செல்வி நன்றி கூறினார்.