உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர்-பழங்குடியின மக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி

Published On 2023-04-16 07:59 GMT   |   Update On 2023-04-16 07:59 GMT
  • ஆதிதிராவிடர்-பழங்குடியின மக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
  • பொருளாதார கடன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நிலையான வளர்ச்சியே அரசின் முதன்மையான நோக்கம் என்பதை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடுகின்ற வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை திறம்பட செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்களை அனைத்து வகையிலும் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலம் மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்கள் மட்டும்), நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்), தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற்ற கலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணாதேவி கூறும்போது, நான் தினசரி விவசாயக் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்ககூடிய வருவாயினை கொண்டு, எனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் தமிழக அரசின் தாட்கோவின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அறிந்து இளைஞர்களக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சொந்தமாக டிராக்டர் வாங்க இணையதளம் மூலம் விண்ணப்பித்தேன்.

சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விண்ணப்பத்தினை எனது இருப்பிடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு அதன் பின் டிராக்டர் வாங்கிட ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் கடனுதவி வழங்கினர். இதற்கு அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கிடைத்தது. இதனைக் கொண்டு மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் வருவாய் ஈட்டி, வங்கிக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் செலுத்தி வருகிறேன்.

டிராக்டர் பராமரிப்பு செலவினங்கள் போக ரூ.10 ஆயிரம் சேமித்திட முடிகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசுக்கு நன்றி. இதேபோல் பயன்பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி ெதரிவித்தனர்.

Tags:    

Similar News