ஆதி திராவிடர்-பழங்குடியின மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
- ஆதி திராவிடர்-பழங்குடியின மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
- இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட் டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மாணவ-மாணவியர் விடுதிகள் மாணவர் விடுதி 22, மாணவியர் விடுதி 13 என மொத்தம் 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ-மாணவிகள் கீழ்கண்ட அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.
விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி நூல்கள் இலவசமாக வழங்கப்படும். விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 4 இணை சீருடைத்துணிகள் தைத்து வழங்கப்படும்.
அரசாணைப்படி 85 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85 சதவீதம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் (10சதவீதம்), பிற வகுப்பி னர்கள் (5சதவீதம்) என்ற விகிதத்தில் புதிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மாணவர்கள் விடுதியில் சேர அவர்களது பெற்றோர், பாதுகாவலரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தூரம் குறைந்த பட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.
மேற்படி நிபந்தனை மாணவிக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் பொருந்தாது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாண வர்கள் இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளி தலைமை யாசிரியர் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு EMIS எண் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். புதிய மாணவர்கள் பள்ளி விடுதிகளுக்கு வருகிற 7-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
விண்ணப்பத்துடன் மாணவ-மாணவிகள் புகைப்படம், சாதிச்சான்று, ஆதார் அடையாள அட்டை, பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் விண்ணப் பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட காப்பாளர், காப்பாளினி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.