உள்ளூர் செய்திகள்
ராமேசுவரத்தில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதம்
- ராமநாதசுவாமி கோவில் நிர்வாகத்தை கண்டித்து ராமேசுவரத்தில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
- ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்ேவறு கட்சியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்றும், தீர்த்தங்களில் நீராடவும், சிறப்பு சாமி தரிசனம் செய்யவும் அதிக கட்டணம் வசூலிப்படுகிறது.
இைத கண்டித்தும், கோவில் இைண ஆணையர் மாரியப்பனை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு அனைத்து கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. மாநில துணை செயலாளர் கராத்தே பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்ேவறு கட்சியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.