புதிய பஸ்நிலையம் கட்ட முதல் தவணையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு
- புதிய பஸ்நிலையம் கட்ட முதல் தவணையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி ஆகும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சில் மாதாந்திர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் அண்ணா சிலை அருகே கருணாநிதி நினைவு கொடிக்கம்பம் அமைக்க தலைவர் கொண்டு வந்த தீர்மானத் திற்கு பா.ஜ.க. கவுன்சிலர் குமார் எதிர்ப்பு தெரி வித்தார். நகர் மன்ற தலை வரின் விளக்கத்திற்கு பின் மற்ற கவுன்சிலர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் குமார்: ராம நாதபுரம் நகரில் பாதாள சாக்கடை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க பல கோடி ரூபாயில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது இதனை கண்காணிக்க தனியாக பொறியாளர், அலுவலர்கள் நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன்: தற்போது தான் ராமநாதபுரம் சிறப்பு நகராட்சிக்குரிய அரசு உத்தரவு வந்துள்ளது இதன்படி புதிதாக அலுவ லர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்ட பராமரிப்பிற்கு தனியாக பொறியாளர் நியமிக்க வேண்டும்.
ராஜாராம் பாண்டியன் (காங்) : முகவை ஊரணியில் வேலை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால் எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். நகராட்சி நிர்வாகம் பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.
கமிஷனர்: பாதாள சாக்கடை குழாயை மாற்றி புதிய குழாய் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்போது முகவை ஊரணியில் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் மணிகண்டன் (காங்) : காவிரி குடிநீர் முழுமையாக வராததால் எனது வார்டில் ஒரு குடம் தண்ணீர் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அல்லி கண்மாய் சுடுகாட்டில் போதுமான வசதிகள் இல்லை. ஓய்வு எடுக்க இடம் இல்லாததால் தகனம் செய்ய வரும் மக்கள் அவதிப்படு கின்றனர்.
தலைவர்: அல்லி கண்மாய் சுடுகாட்டில் ஓய்ெவடுக்கும் இடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குடிநீரை பொறுத்தவரை ராமநாதபுரத்திற்கு 33 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால் 25 லட்சம் லிட்டர் தான் வருகிறது. அதனை வைத்து சப்ளை செய்து வருகிறோம். விரைவில் 55 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் ராமநாதபுரத்தில் புதிய பஸ்நிலையம் கட்ட ரூ.20 கோடியில் பணிகளை தொடங்க அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி யாக இருந்தாலும் முதல் கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ்நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு சந்தை கடை பகுதியையும் சேர்த்து விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் கட்டப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.