பழமையான நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்
- 100 வருடங்களுக்கு மேலான பழமையான நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.
- தொல்லியல் ஆய்வாளர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே புதுக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா மற்றும் கண்காட்சி பள்ளித் தலை மையாசிரியர் மலைப் பாண்டி தலைமையில் நடைபெற்றது. 8-ம் வகுப்பு மாணவி மகாஸ்ரீ வர வேற்றார். தொன்மை பாதுகாப்பு மன்ற செயலர் ராமச்சந்திரன் பழமையை பாதுகாப்பதில் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கி ணைப்பாளரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜகுரு சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசியதாவது:-
100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வர லாற்றைக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், அரண்மனை கள், கோட்டைகள், கோ வில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், மண்டபங்கள், சத்திரங்கள், மடங்கள், தொல்பொ ருட்கள் பரவி கிடக்கும் தொல்லியல் மேடுகள், அகழாய்வுத் தளங்கள், கல்வெட்டுகள், கல்தூண்கள், நடுகற்கள், பழமையான சிற்பங்கள், மரங்கள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்கள் ஆகும்.
வெறும் இலக்கிய சான்று கள் நம் தொன்மையைச் சொல்லிடாது. அதனுடன் தொல்லியல் தடயங்களும் இருந்தால் தான் அதன் பழமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். பழமையான தொல்லியல் சின்னங்களை பாது காக்காமல் விட்டு விட்டால் அவை அழிந்து, இடிந்து போகும்.
வரலாறு தெரிந்த மாண வர்களை அதிகமாக உரு வாக்குவதற்கு தொன்மை பாதுகாப்பு மன்றம் உதவு கிறது
இவ்வாறு அவர் கூறினார்.
7-ம் வகுப்பு மாணவன் வால்மீகநாதன் நன்றி கூறி னார். பின்பு நடந்த கண்காட்சியில் கல்வெட்டு களின் அச்சுப்படிகள், பழைய, புதிய, நுண் கற்கால, பெருங்கற்கால தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்ட னர்.