பன்னோக்கு மருத்துவ முகாம்களில் உயர்தர பரிசோதனைகளுக்கு ஏற்பாடு- அமைச்சர் ராஜகண்ணப்பன்
- பன்னோக்கு மருத்துவ முகாம்களில் உயர்தர பரிசோதனை வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
- பரிசோதனை இலவசமாக வழங்கப்படுகிறது.
கீழக்கரை
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள டி.மாரியூர் கிராமத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்து வத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:-
இந்த முகாமில் 32 சிறப்பு மருத்துவர்கள், 167 செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பணி மேற்கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்கு இணையாக பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோ தனை இலவசமாக வழங்கப் படுகிறது.
கிராமங்களில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். தேவைப்படும் நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் உயர்தர சிகிச்சை வழங்கப்படும். அதுமட்டுமின்றி காப்பீடு அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்து இந்த முகாமில் காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் உள்பட 20 பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களும், மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொண்ட தொகுப்புகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல்சு, காதாரப்பணிகள் துணை இயக்குநர் இந்திரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், காசநோய் பிரிவு துணை இயக்குநர் சிவானந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.