ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொது மக்கள் அவதி
- கீழக்கரை ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
- பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.
கீழக்கரை
மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கீழக்கரையில் பல்வேறு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.பெரும்பாலான வங்கிகள் தானியங்கி பணம் எடுக்கும் ஏ.டி.எம்.எந்திரங்களை நிறுவியுள்ளது.
தற்போது இஸ்லாமி யர்களின் ரமலான் மாதம் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் ரமலான் தேவைக்காகவும், ஸதகா, ஜகாத் தேவைக்கா கவும் ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுப்பார்கள்.
கீழக்கரையில் செயல் படும் பல்வேறு வங்கிகளின் தானியங்கி எந்திரங்களில் பணம் எடுக்க முடியவில்லை.குறிப்பாக தேசிய மயமாக் கப்பட்ட பல்வேறு ஏ.டி.எம்.எந்திரங்களில் பணம் இருப்பதில்லை. இதில் ஆறுதலான ஒரு தகவல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் முறையாக செயல்படுகிறது.
ரமலானை கருத்தில் கொண்டு கீழக்கரையில் செயல்படும் வங்கிகளின் அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை வைத்து முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.