உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

Published On 2022-09-22 06:40 GMT   |   Update On 2022-09-22 06:40 GMT
  • பனை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடந்தது.
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பனை மரங்கள், தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக பயண குழுவினர் தெரிவித்தனர்.

ராமநாதபுரம்

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் விழுப்புரத்தில் பனை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி 38 நாட்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், வைஷ்ணவி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் 34-வது நாளான நேற்று ராமநாதபுரம் வந்தனர். இவர்களை த.மு.மு.க., மாநில செயலாளர் சலிமுல்லாகான் ஆலோசனையின் பேரில், நகர் தலைவர் முகமது அமீன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து தொண்டி வழியாக புதுக்கோட்டை, திருச்சி சென்று சென்னையில் சைக்கிள் ஊர்வலத்தை நிறைவு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பனை மரங்கள், அதனை சார்ந்து உள்ள தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக பயண குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News