பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பையை உபயோகிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பையை உபயோகிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- பேருராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் முன்னிலை வகித்தார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை நிறுத்திவிட்டு மஞ்சள் பை உபயோகிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி அமைப்பின் மாநில தலைவர் நம்புதாளை பாரீஸ் தலைமை தாங்கினார். பேருராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் முன்னிலை வகித்தார். பெண்கள் உயர்நிலை பள்ளி ஆசிரியை காஞ்சனாஅனைவரையும் வரவேற்றார். வழக்கறிஞர் ஆசிக், பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி, சமூக ஆர்வலர் எஸ்டியார் சீனிராஜன், மாலிக், தலைமை காவலர் ரமேஷ் உட்பட பலர் மஞ்சள் பைகளின் நன்மைகளையும், நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கின் தீமைக ளையும் விளக்கி பேசினர்.
இதில் தொண்டி எவரெஸ்ட் நகைக்கடை யினர் வழங்கிய மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.