தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
- மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
கீழக்கரை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாத புரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் இன்று காலை தாய்கார்டன் இடத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட செயலாளர் தினாஜ்கான் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும், முதிய வர்களும், குழந்தைகளும் திடலில் நடைபெற்ற இந்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நிருபர்களிடம் கூறுகையில், இறைத்தூதர் இப்ராஹிமின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாக இந்த பெருநாளின் பல வணக்கங்கள் அமைந்துள் ளன, தொழுகைக்கு பிறகு அவரவர் சக்திக்குட்பட்டு பலி பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சியை சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக தர உள்ளோம், இந்த பெருநாளில் அனைவரும் நல்வாழ்வு பெறவும் அழகிய வாழ்க்கையை வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தோம்,
மனிதருக்கு மனிதர் தியாக உணர்வை வளர்த்துக் கொள்வதையே இப் பெருநாள் வலியுறுத்துகிறது என்றார்.
இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர், இப்ராஹீம்சாபிர், செய லாளர் தினாஜ்கான் மற்றும் நிர்வாகிகள் கீழக்கரை தெற்கு கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.