பத்ரகாளி அம்மன் கோவில் கொடைவிழா-முளைப்பாரி ஊர்வலம்
- பத்ரகாளி அம்மன் கோவில் கொடைவிழா-முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
சாயல்குடி
சாயல்குடி வி.வி.ஆர்.நகரில் உள்ள சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு தனித்து பிரதான பாத்தியப் பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் மற்றும் அம்மன் கொடை விழா, முளைப்பாரி ஊர்வ லம் நடைபெற்றது.
கிராம தலைவர் விஷ்ணுகாந்த், செயலாளர் சிவஞான குருநாதன், பொருளாளர் ஆறுமுகப் பெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கிருஷ்ணன், காசிராஜா, முருகன், குரு முருகன், ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் முன்னிலை வகித்தனர்.
வருடாபிஷேகத்தை முன்னிட்டு முதல், 2-ம் கால யாகபூஜை நடந்தது. 5 ஏக்கர் தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மஞ்சள் பானை நீர் தொட்டு ஆடுதல் நிகழ்ச்சி, பொதுப் படைக்கஞ்சி காய்த்து அம்மனுக்கு தீபாரதனை நடைபெற்றது.
மேலும் அக்னி சட்டி, அம்மன் தேர் பவனி, பொங்கல் வைத்தல், கும்மியடித்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.