மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி பூமி பூஜை
- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 3 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி பூமி பூஜை நடந்தது.
- தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராமநாதசுபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் முழு குடிநீர் தட்டுப் பாட்டை போக்கிடும் வகை யில் தமிழ்நாடு அரசு சார் பில் ரூ.2,819 கோடி மதிப் பீட்டில் சிறப்பு கூட்டு குடி நீர் திட்டம் ஒப்புதல் அளிக் கப்பட்டு கடந்த மே மாதம் 2-ந்தேதி நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தொடங்கப்பட் டுள்ளது.
மேல்நிலை தொட்டிகள்
அந்த வகையில், ராமநாத புரம் நகராட்சியில் ரூ.229 கோடி மதிப்பீட்டில் தொடங் கப்பட்ட சிறப்பு கூட்டு குடி நீர் திட்டப்பணிக்காக கான் சாகிப் தெரு, கோட்டை மேடு, சிங்காரம் தோப்பு ஆகிய மூன்று இடங்களில் 50 லட்சம் மதிப்பீட்டில் 14.5 லட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட இருக்கி றது.
இதையொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக கட்டுமான பணி பூமி பூஜைக்கு குடிநீர் வடிகால் வாரிய மண்டல ஒருங்கி ணைப்பாளர் ஜெ.பாலாஜி தலைமை தாங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கி டலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்த லைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் ரெங்கராசு, ராமநாத புரம் யூனியன் சேர்மன் கே.டி.பிரபாகரன்,
விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாள ரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான நகராட்சி கவுன்சிலர் முகம் மது ஜஹாங்கீர் (எ) ஜவா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் தொழிலதிபர் என்.திருமாறன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ.பிரதீப் மற்றும் உள்ளாட்சி பிரதிநி திகள் கலந்துகொண்டனர்.