இரு தரப்பினர் மோதல்; 9 பேருக்கு அரிவாள் வெட்டு
- இரு தரப்பினர் மோதல்; 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ளது கீழக்குளம் கிராமம். இங்குள்ள மந்திரமூர்த்தி அய்யனார் கோவிலில் கடந்த வாரம் புரவிடுப்பு விழா தொடங்கி யது. இந்த திருவிழா தொடர்பாக கீழக்கு ளத்தைச் சேர்ந்தவரும் கே.ஆர். பட்டணம் ஊராட்சியின் துணைத் தலைவருமான பெரியசாமி தரப்பிற்கும், முதுகுளத்தூர் திமுக ஒன்றிய செயலா ளரான சண்முகம் தரப்பிற்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
கோவில் திருவிழா முடிந்து அன்னதானம் நடந்த போது இருதரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அரிவாள், கத்தி, கம்பு, கிரிக்கெட் மட்டை ஆகிய வற்றால் தாக்கியும், கற்களை வீசி எறிந்தும் இருதரப்பி னரும் கடுமை யாக மோதி கொண்டனர்.
இதில் கீழக்குளத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது42), சண்முகவேலு(67), பெருங்கருணையைச் சேர்ந்த சண்முகம்(47), கீழக்குளம் முருகன்(46) முத்துராமலிங்கம் மனைவி கஸ்தூரி(50), மகாலிங்கம் மகன் உதயகுமார்(19), முத்துக்குமார்(30), மாரி முத்து (43), ஜெகதீஸ்வரன்(33) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்கள் மதுரை, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த மோதலின் போது பாது காப்பு பணியில் ஈடுபட்ட அபிராமத்தை சேர்ந்த காவலர் சரவணன் காயம் அடைந்தார். இவர் கமுதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மோதல் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.