உத்தரகோசமங்கை கோவிலுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்
- உத்தரகோசமங்கை கோவிலுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.
- பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.
குறிப்பாக விஷேச நாட்களிலும், ஆருத்திரா தரிசனத்தன்றும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இந்த கோவிலுக்கு சென்று வர தற்போது வரை போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பக்தர்கள் கூடுதல் விலை கொடுத்து ஆட்டோ, கார்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சத்திரக்குடி, சாயல்குடி, கீழக்கரை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து உத்தரகோசமங்கைக்கு பஸ் வசதி இல்லை. இப்பகுதியை சேர்ந்த வர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் ராமநாத புரத்திற்கு வந்து பஸ் ஏற வேண்டும். இதனால் பொது மக்கள் கடும் சிரமமடைகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும் அவதியடை கின்றனர். எனவே பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.