தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதி காக்க வேண்டும்-கருணாஸ்
- தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதி காக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
- புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
கமுதி
முக்குலத்தோர் புலிப்ப டை கட்சியின் நிறுவனரும், நடிகருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2016 -ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து பலமுறை சட்ட பேரவையில் வலியுறுத்தி வந்துள்ளேன்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முக்குலத்தார் புலிப்படை கட்சி, முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் உள்பட 13 மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரனையில் 2021 நவம்பரில் உச்சநீதிமன்றம் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது. தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்த புள்ளி விபரமும் கிடையாது. எனவே நாங்கள் ஜாதிவாரியாக கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியின ருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழ கத்தில் ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளிக் கொண்டு வந்தால் தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும்.
எனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப் பிற்கான ஆணையம் அமைத்து புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.