- பரமக்குடியில் கார் டிரைவர் அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் தென்காசி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.
- இந்த தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய கோவிந்தராஜ், முனீஸ்வரியை கைது செய்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தேவராஜ் (வயது29).
இவர் சென்னை மேட்டுகுப்பம் பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் தனது உறவினரான பன்னீர் என்பவருக்கு ரூ. 3 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். அதனை அவர் திருப்பி கொடுக்காததால் பன்னீர் வைத்திருந்த காரை, தேவராஜ் சென்னைக்கு எடுத்துச்சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் ஆஜராக தேவராஜ் பரமக்குடி வந்தார். பின்னர் ராமநாத புரம் கோர்ட்டில் ஆஜராகி விட்டு பரமக்குடி வந்தார். இதுபற்றி அறிந்த பன்னீர், தமிழ், வினித், கோவிந்தராஜ், முனீஸ்வரி ஆகிய 5 பேர் தேவராஜை சந்தித்து அவர் எடுத்துச் சென்ற காரை திருப்பித்தரும்படி கேட்ட னர். அப்போது பணத்தை தந்தால் காரை தருவதாக தேவராஜ் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பன்னீர் உள்பட 5 பேரும் தேவராஜை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலை யாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. வசந்தகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண் ணன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய கோவிந்தராஜ், முனீஸ்வ ரியை கைது செய்தனர்.
இந்தநிலையில் கொலை யாளி வினித் தென்காசி கோர்ட்டில் சரணடைந் துள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.