உள்ளூர் செய்திகள்

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் பரிசு வழங்கினர். அருகில் செஸ் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளார்.

செஸ் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2022-06-14 08:20 GMT   |   Update On 2022-06-14 08:20 GMT
  • கீழக்கரையில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
  • இந்த ேபாட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசி யேஷன் சார்பில் 9 வயதிற்கு ட்பட்டோர் பொது மற்றும் குழந்தைகள் செஸ் போட்டி கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

34-வது தமிழ்நாடு மாநில அளவிலாள இந்த ேபாட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவிற்கு செஸ் அசோசியேஷன் மாவட்ட துணை தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டத்த லைவர் சுந்தரம் வர வேற்றார்.

கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினர். புரவலர்கள் தேவி உலகுராஜ், சண்முகசுந்தரம், செஸ் அசோசியேஷன் துணை செயலாளர் ஜீவா, கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிக புள்ளிகள் அடிப்ப டையில் வீரர்கள் சென்னை நிஜேஷ், ஆரவ் (தலா 8 புள்ளிகள்), வேலூர் மிதுன் பிரனவ் (7.5 புள்ளிகள்), சென்னை அஷ்வ சண்முகம், விஷ்ருத், செங்கல்பட்டு பிரிதிவ் ஆரோக்யதாஸ் (தலா 7 புள்ளிகள்), ஈரோடு குரு பிரனவ், ஜெய் தட்ஷின், திருப்பூர் ரித்திக், செங்கல்பட்டு அரிக்ஸாண்டர் ஜானி (தலா 6.5 புள்ளிகள்), திருச்சி பவித்ரா, செங்கல்பட்டு ஸ்ரீநிகா, அரியலூர் ஷர்வானிகா (தலா 7.5 புள்ளிகள்), சென்னை பூஜா ஸ்ரீ (7 புள்ளிகள்), திருவள்ளூர் ஹர்ஷிதா, மதுரை தீப்தாஸ்ரீ ரவி கணேஷ், சென்னை சனா (தலா 6.5 புள்ளிகள்), சென்னை அருஷி தினேஷ், ஆயுஷி தினேஷ், கன்னியாகுமரி பெசிலிகா பியான்ஸ் (தலா 6 புள்ளிகள்) பெற்றனர்.

சர்வதேச ஆர்பிட்டர் பழனியப்பன், மாநில ஆர்பிட்டர் அதுலன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வீரர், வீராங்க னைகள் சுற்றுவாரியாக பெற்ற புள்ளி அடிப்ப டையில் பரிசுக்கு உரியோரை தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த செஸ் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News