தண்ணீர் தேங்கிய பகுதியில் நகர்மன்ற தலைவர் நேரில் ஆய்வு
- தண்ணீர் தேங்கிய பகுதியில் நகர்மன்ற தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
- மொத்த அளவு-235.90, சராசரி-14.74 மி. மீ, மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட த்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
ராமநாதபுரத்தில் 9-வது வார்டு செய்யதுஅம்மாள் பள்ளியின் பின்புறம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் மின்கம்பம் சாய்ந்தது. நகர்மன்ற தலைவர் கார்மேகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இன்று காலை நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் கேணிக்கரை, புதிய பஸ் நிலையம், அண்ணா நகர், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலாடி - 4.80, வாலிநோக்கம் -4.60,கமுதி - 1.50, பள்ளமோர்க்குளம்-5, மண்டபம்- 11, ராமநாதபுரம்- 41.20, பாம்பன்-40.40, ராமேசுவரம்- 77.60, தங்கச்சிமடம்-35.80, திருவாடானை-9.20, தொண்டி- 4.80,
மொத்த அளவு-235.90, சராசரி-14.74 மி. மீ, மழை பதிவாகியுள்ளது.