- ராமநாதபுரம் நகரில் தன்னார்வலர்கள், அறக்கட்டளையினர், சுய உதவிக்குழுவினருடன் இணைந்து தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
- விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டு 175 மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ஆணையாளர் அஜிதா பர்வீன் கூறியதாவது:-
ராமநாதபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட மக்கள் கூடும் இடங்களான புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரண்மனைரோடு போன்ற பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
165 தன்னார்வலர்கள், அறக்கட்டளையினர், சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் இணைந்து தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது தொடர்பான விளக்கத்துடன் கூடிய பிரசுரங்கள் வீடு வீடாக தன்னார்வலர்கள், மாண வர்கள், மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
அதன்படி குப்பைகளை சரியான முறையில் மக்கும் மற்றும் மறுசுழற்சி கழிவு களை பிரித்து வழங்கிய பொதுமக்கள் 58 பேருக்கு நினைவு பரிசுகள், சான்றி தழ் வழங்கப்பட்டது.நகராட் சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அனுமதி யின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம் பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
நகரில் உள்ள நீர் நிலைகளில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. ஊரணிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தினசரி குப்பைகளை சரியான முறையில் மக்கும் மற்றும் மறுசுழற்சி கழிவுகளாக பிரித்து வழங்கிய 130 தூய்மை பணியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. நகராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிகளில் 15 டன் கட்டுமான மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு மேடு பள்ளமான பகுதிகளில் கொட்டி சரி செய்யப்பட்டது. நகராட்சிக்குட்பட்ட 25 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க திட்டம் குறித்து விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டு 175 மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.