பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க கலெக்டர் அறிவுறுத்தல்
- பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-24 பள்ளி வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பள்ளி வாகனங்கள் சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன்படி பள்ளி வாகனங்களை தினந்தோறும் முழுமையாக பரிசோதித்து குறைகளை அறிந்து முறையாக பராமரித்து சீரிய முறையில் பள்ளி வாகனத்தினை இயக்க இம்மாவட்ட தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், பள்ளி பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி பேருந்தின் நடத்துனர்கள் பள்ளி குழந்தைகளை பாதுகாப்பான முறையில் ஏற்றி இறக்கிச்செல்ல கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், பள்ளி வாகனங்கள் நகர எல்லையில் 40 கி.மீ வேகத்தில் மிகாலும், பிற அனுமதிக்கப்பட்ட சாலைகளில் 50கி.மீ என்ற வேகத்தில் மிகாமலும் இயக்கப்பட வேண்டும். 2023-2024 கல்வி ஆண்டில் இம்மாவட்டத்தில் கூட்டாய்வு செய்து சரியாக உள்ள பள்ளி வாகனங்கள் கீழ்கண்ட ஸ்டிக்கர் மூலமாக வாகனத்தினுடைய காற்றுத்தடை கண்ணாடியில் ஒட்டப்பட அறிவுறுத்தி அதன்படி ஒட்டி இயக்கப்படுகிறது. சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க உறுதி ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.