உள்ளூர் செய்திகள்

ஏர்வாடி மனநல காப்பகத்தில் வசிப்பவர்களிடம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் குறைகளை கேட்டறிந்தார்.

ஏர்வாடி மனநல காப்பகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-02-18 07:57 GMT   |   Update On 2023-02-18 07:57 GMT
  • ஏர்வாடி மனநல காப்பகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.
  • அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா?என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் மனநல காப்பகத்திற்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டு மனநல காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள 22 பெண்கள், 28 ஆண்கள் மொத்தம் 50 பேர் தங்கி வருவது குறித்து அறிந்து கொண்டதுடன், அவர்களை சந்தித்து சரியாக உணவு வழங்கப்படுகிறதா? மற்றும் மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார்.

தற்பொழுது அங்குள்ள நபர்கள் சுயதொழில் செய்யும் அளவிற்கு குணமடைந்ததையொட்டி, கடல்பாசியில் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வயர் கூடை, தயாரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அவர்களிடம் உங்களை நன்றாக பராமரிக்கிறார்களா, உங்களுக்கு மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமா என்று கேட்டறிந்தார்.காப்பகத்தை பராமரிக்கும் நிறுவனத்திடம் இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கி பூரண குணமடைந்து அவர்களது உறவினர்கள் அழைத்துச் செல்லும் வரை நன்றாக பாதுகாத்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல உதவி அலுவலர் ஜெய்சங்கர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News